You are here
Home > செந்தூர் செய்திகள் > தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள் மறியல்: 241பேர் கைது

தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள் மறியல்: 241பேர் கைது

தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட முயன்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 241பேரை போலீசார் கைது செய்தனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், வருவாய்த்துறை, வணிக வரித்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிகள் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளனன. பள்ளி மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடக்கப்பள்ளிகள் அதிகளவு செயல்படவில்லை.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக அரசு ஊழியர்-ஆசிரியர்கள் போராட்டம் நீடிக்கிறது. இதையொட்டி தூத்துக்குடியில் இன்று அரசு ஊழியர்கள் சங்கம் முன்பிருந்து கல்லூரி அலுவலர்கள் சங்க தலைவர் முருகன் தலைமையில் மறியல் போராட்டடத்திற்காக பேரணியாக சென்றபோது, பாளை. ரோட்டில் காய்கறி மார்க்கெட் அருகே சென்ற அவர்களை மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) முத்து தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும், மறியலில் ஈடுபட முயன்றதாக 130பெண்கள் உட்பட 241பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.

Leave a Reply

Top