You are here
Home > 2018 > July

விற்பனை வாய்ப்பு அதிகமுள்ள மண்பாண்டங்கள் முன்னர் புறக்கணிக்கப்பட்ட சாதனங்கள் அதில் உள்ள சிறப்பம்சங்கள் காரணமாக மீண்டும் புத்துயிர் பெறுகின்றன. மண்பாண்டங்கள் பயன்பாடு குறைந்து விட்டாலும் அதில் உள்ள அத்தியாவசியம் /சுற்று சூழலை மாசுபடுத்தாத தன்மையினால் மீண்டும் புதிய வடிவில் அனைவர் இல்லங்களை அலங்கரித்து வருகிறது.சிறிய தண்ணீர் பாட்டில் வடிவில் கூட வந்து சந்தையில் அமோகமாக விற்பனையாகிறது,புதுமையான மண்பாண்டங்கள் தயாரிப்பவர்களுக்கு விற்பனை வாய்ப்பு அதிகம், கிராமங்களில் எளிய முறையில் தயாரிக்கப்படும் காணொளி காட்சி......ஆர்டரின் பேரில் நாம்

அருந்தமிழ் மருத்துவம்

அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது சித்த மருத்துவர் பாக்கம் தமிழன் தமிழ் மருத்துவ அறிவுரைப்பா மூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன் பசிக்குசீ ரகமிஞ்சி கல்லீரலுக்கு கரிசாலை காமாலைக்கு கீழாநெல்லி கண்ணுக்கு நந்தியாவட்டை காதுக்கு சுக்குமருள் தொண்டைக்கு அக்கரகாரம் தோலுக்கு அருகுவேம்பு நரம்பிற்கு அமுக்குரான் நாசிக்கு நொச்சிதும்பை உரத்திற்கு முருங்கைப்பூ ஊதலுக்கு நீர்முள்ளி முகத்திற்கு சந்தனநெய் மூட்டுக்கு முடக்கறுத்தான் அகத்திற்கு மருதம்பட்டை அம்மைக்கு வேம்புமஞ்சள் உடலுக்கு எள்ளெண்ணை உணர்ச்சிக்கு நிலப்பனை குடலுக்கு ஆமணக்கு கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே கருப்பைக்கு அசோகுபட்டை களைப்பிற்கு சீந்திலுப்பு குருதிக்கு அத்திப்பழம் குரலுக்கு தேன்மிளகே! விந்திற்கு ஓரிதழ்தாமரை வெள்ளைக்கு கற்றாழை சிந்தைக்கு தாமரைப்பூ சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை கக்குவானுக்கு வசம்புத்தூள் காய்ச்சலுக்கு நிலவேம்பு விக்கலுக்கு மயிலிறகு வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர் நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர் வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ வெட்டைக்கு

Top